வடமராட்சி, பல்லப்பை பிரதேசத்தில் மனித எலும்புக் கூடுகள் மற்றும் எச்சங்கள் கண்டெடுக்கப்படதாக கடந்த சிலவாரங்களுக்கு முன் வெளிவந்த செய்திகள் உண்மையாக இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாண சபை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபிலையே அவர் இதனை தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
வடமாரட்சி பல்லப்பை பிரதேசம் பல வருடங்களாக இராணுவ கட்டுப்பாடில் இருந்து சிறிது காலத்திற்கு முன்னர் தற்போதே மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது
அவ்வாறு இராணுவத்தால் கையளிக்கபட்ட காணிகளை உரிமையாளர்கள் துப்பரவு செய்யும் போது ஒரு கிணற்றில் இருந்து 17 மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டதாகவும் மற்றுமொரு கிணற்றில் இருந்தும் சில எழும்பு கூடுகள் மீடகப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன.
அச் செய்தி தொடர்பாக பிரதேச மக்களிடம் கேட்ட போது 40க்கு மேற்பட்ட மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டதாகவும் மக்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்து இருந்தாலும் அதில் சில உண்மைகள் இருக்கலாம் என நான் சந்தேகிக்கின்றேன்
சம்பவம் தொடர்பாக யாருக்கும் மக்கள் எதுவும் கூற கூடாது என இராணுவத்தினராலும் இராணுவ புலனாய்வாலர்களால் மிரட்டப்பட்டுள்ளதாக சில ரகசிய தகவல்கள் மூலம் நான் தெரிந்து கொண்டுள்ளேன்.
வடமராட்சி பகுதியில் பலர் காணாமற் போயுள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இப் பிரதேசத்தில் மீட்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் எழும்புக்கூடுகள் காணாமல் போனவர்களினது எழும்புக்கூடுகளாக கூட இருக்கலாம்.
இப்பிரதேச காணிகளில் இன்னமும் மனித எழும்பு எச்சங்கள் மீட்கப்படலாம் என சந்தேகிக்கின்றேன்.
எனவே சம்பவம் தொடர்பான நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என பருத்தித்துறை நீதிமன்றில் மனு ஒன்று சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
வடமராட்சியில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதி கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு