பல்ராம் நாயுடுவாக நடிக்கிறார் கமல்

பல்ராம் நாயுடு கதாபாத்திரம் ஞாபம் இருக்கிறதா.? ‘தசாவதாரம்’ படத்தில் கமல் நடித்த வேடங்களில் இதுவும் ஒன்று. அமெரிக்காவிலிருந்து வரும் விஞ்ஞானி கோவிந்த் கமலை விசாரிக்கும் அதிகாரியாக இந்த பல்ராம்நாயுடு ரோல் அமைந்திருந்தது. அதோடு காமெடி கலந்த ரோலில் கமல் நடித்த இந்த வேடம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக அந்தகேரக்டரில் அவர் பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது.

kamal

இந்நிலையில் தற்போது கமல், ராஜீவ் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் ‘பல்ராம் நாயுடு’ சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. அதாவது தசாவதாரம் படத்தில் கமலின் ரோலை மட்டும் காண்பித்தார்கள். இப்போது அந்த பல்ராம் நாயுடு ரோலையே ஒரு முழுப்படமாக உருவாக்கி இருக்கிறார்களாம். இதில் பல்ராம் நாயுடுவாக கமலே நடிக்க, அவரது மகளாக ஸ்ருதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட இருக்கிறது. இப்படத்தை கமலுடன் இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை இன்று நடிகர் சங்க வளாகத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. இதில் நடிகர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்.

Related Posts