பல்புகள் வெடித்ததில் 400 பேருக்கு பார்வை பாதிப்பு

சீன பல்புகள் வெடித்துச் சிதறியதில் 400 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தன்கானில் நடைபெற்ற கலாச்சாரத் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவின் போது அங்கு ஒளி அலங்காரத்துக்காக சீன பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், திடீரென ஆறு சீன பல்புகள் வெடித்துச் சிதறியுள்ளது. சீன பல்புகள் வெடித்து சிதறிய விபத்தில் சுமார் 400 பேருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தன்கானில் நிகழ்ந்த இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts