பல்கேரியா பைக் ரேஸரையே அசர வைத்த அஜித்

அஜித்தின் பைக் ஓட்டும் திறனை பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறார் பிரபல பைக் ரேஸ் பிரியரும், சண்டைக்கலைஞருமான பல்கேரியாவை சேர்ந்த ஜோரியன். வேதாளம் படத்தை தொடர்ந்து அஜித், மீண்டும் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தற்காலிகமாக AK 57 என்றே அழைத்து வருகிறார்கள். இப்படத்தில் அஜித் இண்டர்போல் ஆபீசராக நடிக்கிறார். அஜித் உடன் காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்புகள் பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் பல்கேரிய நாட்டு தெருக்களுக்குள் அஜித் மிக வேகமாக பைக் ஓட்டுவது போன்ற காட்சிகள் வருகிறதாம். ஏற்கனவே பைக் வெறியரான அஜித், அதை செய்ய தயாராக தான் இருந்தாராம். இருந்தாலும் சில காட்சிகளில் பாதுகாப்பு கருதி, அஜித்திற்கு பதிலாக பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பைக் ரேசரான ஜோரியன் என்பவரை டூப் போட செய்து அந்த காட்சிகளை படம் பிடித்துள்ளனர்.

அஜித்தின் பைக் ஓட்டும் திறனை பார்த்து வியந்து போய் இருக்கிறார் ஜோரியன். இதுப்பற்றி ஜோரியன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது… ‛‛அஜித் ஒரு சிறந்த மனிதர், என்னுடைய பைக்கில் அவர் செய்த சாகசங்களை பார்த்து மிரண்டு போய்விட்டேன், மிகவும் எளிமையான மனிதர் என்று பாராட்டியுள்ளார். மேலும் தான் பைக்கில் வீலிங் செய்ததை அஜித் போட்டோ எடுத்து தனக்கு பரிசாக வழங்கியதையும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் ஜோரியன்.

Related Posts