பல்கேரியாவிலிருந்து சென்னை திரும்பினார் அஜித்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பா நாட்டில் நடைபெற்ற நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் பல்கேரியாவில் நடத்த திட்டமிட்டு அங்கு முகாமிட்டனர். ஆனால் அங்கு கடும் குளிர் வாட்டி எடுத்ததோடு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட அஜித் சென்னை வர விரும்பினார். இதனால் 80 சதவிகிதம் படப்பிடிப்பை அங்கு முடித்துவிட்ட படக்குழு மீதமுள்ளதை ஐதராபாத்தில் நடத்த உள்ளனர்.

இருதினங்களுக்கு முன்னர் அஜித் உள்ள படக்குழுவினர் பல்கேரியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அஜித் வருகையை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ரசிகர்கள், விமான நிலையத்தை முற்றுகையிட, பலத்த பாதுகாப்புக்கிடையே அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் அஜித்.

Related Posts