பல்கலை. விரிவுரையாளர்களை பணிக்குத் திரும்புமாறு உயர்கல்வி அமைச்சர் அழைப்பு

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் இம்மாதம் 30ஆம் திகதி தொடக்கம் வேலைக்கு சமூகமளிக்குமாறு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 4ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலை விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர்.

பல தடவைகள் ஜனாதிபதி செயலாளருடன் சந்திப்புக்களை மேற்கொண்டும் இதுவரை விரிவுரையாளர்களது கோரிக்கைக்கு சரியானதொரு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts