அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வருகைதருமாறு வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் இவ் அழைப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள அதேவேளை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறிதொரு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
வடக்கு கிழக்கில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 18 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களே கலந்துகொண்டிருந்தனர்.
இதில் ஈபிஆர்எல்எவ் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் சிவசக்கதி ஆனந்தன், சிறிலங்கா சுதந்திரகட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஈழமக்கள் ஜனநாயகட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஆகியோருடன் வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவ கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தார். ஏனைய மூன்று அங்கத்துவ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொண்டிருக்கவில்லை.
இதேவேளை கலந்து கொள்ளத் தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பகிரங்கமாகக் கண்டனங்களை வெளியிட்ட மாணவர்கள் தமிழ்த் தலைவர்கள் வரலாற்றுத் தவறிழைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுமுள்ளனர்.
கலந்துரையாடலில் கலந்து கொண்டோர்
1. டக்ளஸ் தேவாணந்தா – யாழ் தேர்தல் மாவட்டம்
2. சிவசக்தி ஆனந்தன் – வன்னி தேர்தல் மாவட்டம்
3. அங்கஜன் இராமநாதன் – தேசியப்பட்டியல் உறுப்பினர்
கலந்துரையாடலுக்கு_வருகை_தராதோர்
1. த. சித்தார்த்தன் – யாழ் தேர்தல் மாவட்டம்
2. ஈ. சரவணபவன் – யாழ் தேர்தல் மாவட்டம்
3. ம. ஆ. சுமந்திரன் – யாழ் தேர்தல் மாவட்டம்
4. மாவைசேனாதிராஜா – யாழ் தேர்தல் மாவட்டம்
5.சிவஞானம்சிறீதரன் – யாழ் தேர்தல் மாவட்டம்
6. விஐயகலா மகேஸ்வரன்- – யாழ் தேர்தல் மாவட்டம்
7. இரா. சம்பந்தன் – திருகோணமலை மாவட்டம்
8. சார்ல்ஸ் நிர்மலநாதன் – வன்னி தேர்தல்மாவட்டம்
9. செல்வம் அடைக்கலநாதன் – வன்னி தேர்தல் மாவட்டம்
10. கவீந்திரன் கோடீசுவரன் – அம்பாறை மாவட்டம்
11.ஞானமுத்து சிறிநேசன் – மட்டக்களப்பு மாவட்டம்
12. சீனித்தம்பி யோகேஸ்வரன் – மட்டக்களப்பு மாவட்டம்
13.சதாசிவம் வியாழேந்திரன் – மட்டக்களப்பு மாவட்டம்
14. துரைரத்தினசிங்கம் – தேசியப்பட்டியல் உறுப்பினர்
15. சாந்தி சிறீஸ்கந்தராசா – தேசியப்பட்டியல் உறுப்பினர்
16.சிவமோகன் – வன்னி தேர்தல் மாவட்டம்