பல்கலை மாணவர்கள் மீதான பொலிஸாரின் தடியடி ; அறிக்கை கோருகிறார் ரணில்

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தடியடி தாக்குதல் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு சட்ட ஒழுங்கு மற்றும் சிறசை்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு பணிப்புரை விடுத்துள்ள பிரதமர், விசாரணை அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் இனங்ககோனுக்கு பணித்துள்ளார்.

பொறியியல் உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நேற்று வியாழக்கிழமை பாரிய பேரணி ஒன்றை நடத்தியதோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தினால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதோடு, போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீப் புகைப் பிரயோகத்தையும், நீர்த் தாரைப் பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.

இதனால் மாணவர்களுக்கும், பொலிஸாரிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி தாக்குதலை நடத்தியுள்ளதோடு, அவ்வாறு தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மறுத்திருக்கிறார்.

எவ்வாறாயினும் காயமடைந்த மாணவர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

colombo-student-attack- (4)

colombo-student-attack- (5)

colombo-student-attack- (6)

colombo-student-attack- (1)

colombo-student-attack- (2)

colombo-student-attack- (3)

Related Posts