யாழ்.பல்கலை மாணவர்கள், ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல்!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், மற்றும் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1-uni-notes

1-uni-notes-2

பல்கலைக்கழக சூழலில் இந்த சுவரொட்டிகள் இன்று காலை ஒட்டப்பட்டிருந்தது. அதில் ‘இவர்கள் புலிகளை உருவாக்குகிறார்கள்’ , ‘இவர்களைச் சுடுவோம்’, ‘மாவீரர் தினம் கொண்டாட விடமாட்டோம்’ என்று கொச்சைத் தமிழில் எழுதப்பட்டு 4 மாணவர்களதும் ஆசிரியர் சங்க தலைவரதும் பெயர்களும் குறிப்பிடப்பட்டு இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Related Posts