பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும் என்று உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.
உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க நேற்றுப் புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியை தேசிய பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைத்ததும் அப்பயிற்சியை இராணுவ முகாம்களில் முன்னெடுத்தமையும் பிழையான வழிமுறையாகும். எனவே, இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும்” – என்றார்.