பல்கலை மாணவர்களின் போராட்டத்தை குழப்பும் வகையில் துண்டுபிரசுரங்கள் விநியோகம்

காணாமலாக்கப்பட்டவா்கள் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை குழப்பும் வகையில் துண்டுபிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம் என வலியுறுத்தியும் பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டமொன்றை 16ஆம் திகதி நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் அதனை குழப்பும் வகையில் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டத்தை 15ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டு துண்டுபிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறான துண்டுபிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த துண்டுபிரசுரத்தில், எதிர்வரும் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும், அதற்காக மக்களை ஒன்றுகூடுமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த துண்டுபிரசுரங்களில் அமைப்பு அல்லது தனி நபா்களுடைய பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Related Posts