பல்கலை சூழலில் இராணுவ பிரசன்னம் வேண்டாம்- வடமாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றம்

jaffna-universityயாழ். பல்கலைக்கழகத்தை சூழ உள்ள பிரதேசத்தில் இராணுவ பிரசன்னம் அகற்றப்பட வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கைதடியில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ரி.லிங்கநாதன் மேற்படி தீர்மானத்தினை முன்மொழிந்திருந்தார். மேற்படித் தீர்மானம் தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் படையினர்,பொலிஸார் மற்றும் படைப்புலனாய்வாளர்களின் நட மாட்டம் அதிகரித்திருக்கும் நிலையில் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் படையினர் மற்றும் படைப்புலனாய்வாளர்களின் நடமாட்டம் நிறுத்தப்படவேண்டும். அதற்கான வேண்டுகோளினை வடமாகாணசபை பல்கலைக்கழகத்திடம் விடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Related Posts