பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அடுத்த மாதம் 7ம் திகதி வரை இந்தக் கால எல்லையை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, 2016/ 2017ம் கல்வி ஆண்டுக்காக மாணவர்களை பதிவு செய்வதற்கான இறுதித் திகதியாக, ஜூன் 30 அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்து.

Related Posts