பல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்; துணைவேந்தர் மறுப்பு!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் சந்தேகமடைந்துள்ளதையடுத்து, புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புதிய தூபி அமைக்க பல்கலைகழக துணைவேந்தர் அடிக்கல் நாட்டினார். இதன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தையும் முடித்து வைத்தார்.

எனினும், உடனடியாக தூபி அமைக்க துணைவேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், இன்றே… இப்பொழுதே தூபி அமைக்க வேண்டுமென மாணவர்கள் விடாப்பிடியாக நிற்கிறார்கள்.

தற்போது பெருமளவானவர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

உடனடியாக தூபி அமைக்கப்படா விட்டால் பிறிதொரு வடிவத்தில் போராட்டத்தை தொடரவுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts