பல்கலையில் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வினை ஒத்திவைக்க கோரி தொழிற்சங்க நடவடிக்கை

நேற்று (20-02-2018) இடம்பெற்ற ஊழியர்சங்க பொதுக்கூட்டத்தில் எமது கோரிக்கைக்கு அமைவாக நேர்முகத் தேர்வானது ஒத்திவைக்கப்படாது குறித்த தினங்களில் (21, 22 பெப்ரவரி 2018) நடாத்தப்படுமானால் அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையினை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

நேற்று மாலை வரை யாழ் பல்கலை நிர்வாகத்தினால் எந்தவித சாதகமான பதிலும் வழங்கப்படவில்லை. மாறாக எமது கோரிக்கையினைப் புறந்தள்ளி நேர்முகத்தேர்வுகளை நடாத்துவதற்கு யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் முனைப்புக் காட்டும் நிலையே காணப்பட்டது.

அத்துடன் ஊழியர் சங்க பிரமுகர் ஒருவருக்கு நேற்று (20-02-2018) இரவு தொலைபேசி வழி நேர்முகத் தேர்வினை குழப்புவது நீதானா? என்று அநாமதேய மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச்செயலாளர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சுற்றறிக்கை…

Related Posts