பல்கலைச் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற மிக ஆவலாக இருக்கின்றேன்- விக்கினேஸ்வரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர் அடங்கிய குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று 18.09.2013 (இன்று) காலை 9 மணிக்கு உதயன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், இ.சரவணபவன் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் வட மாகாணசபைத் தேர்தலில் மக்களை வாக்களிக்க வைக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் சம்பந்தமாகவும். தேர்தலின் பின் மக்களின் நம்பிக்கையை தக்க வைக்க கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமது மாகாண அரசு மிகவும் சிறந்த திட்டமிடலின் அடிப்படையில் மக்களுக்கு பணியாற்றக்கூடிய வகையியிலும், மாகாண சபை உறுப்பினர்களுக்கு பொறுப்புக்களைப் பகிர்ந்தளித்து எல்லா மக்களுக்கும் நன்மைகள் சென்றடைவதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் செயலாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தான் பல்கலைச் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற மிக ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Posts