பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் எண்ணிக்கை 63.1 வீதமாக அதிகரிப்பு; -கல்வி அமைச்சர்

bandula_gunawardena300pxவெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களின் எண்ணிக்கை 63.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக இம்முறையே ஆகக்கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்படுவதாகவும்,2016ம் ஆண்டை அடையும் போது இதன் சதவீதம் 80 சதவீதமாக அதிகரிக்கப்படும் வகையில் இலங்கையின் கல்வி முறை மேலும் வளர்ச்சியடையும்,

கூடிய எண்ணிக்கையான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்படுகின்ற போதிலும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 4 சதவீத வளர்ச்சியினை மாத்திரமே கொண்டிருப்பதனால் இதனை பாரிய வெற்றியாக கருதமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வியமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றின் முயற்சியினால் ஓரளவு பலாபலன்களை அடையக் கூடியதாகவிருந்த போதிலும் எதிர்காலத்தில் இதன் சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் வினாத்தாள்கள் மற்றும் பாட விதானங்களில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படும்

அத்துடன் கல்வி வளர்ச்சி தொடர்பாக பாடசாலை அதிபர்களின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் 2012 ம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் ஒவ்வொரு பாடங்களிலும் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் முறைமை ஆகியன பரீட்சைகள் திணைக்களத்தின் உதவியுடன் கல்வியமைச்சினால் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் கொழும்பு மாவட்டத்திலேயே விஞ்ஞானம் மற்றும் கணித பிரிவைச் சேர்ந்த அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

விஞ்ஞானத்துறையைப் பொறுத்தவரை கொழும்பிற்கு அடுத்தபடியாக முறையே மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, கம்பஹா, காலி, கண்டி என்ற ஒழுங்கில் மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

கணிதத்துறையில் இரண்டாம் இடத்தில் காலியும் அதனைத் தொடர்ந்து முறையே மாத்தறை, யாழ்ப்பாணம், கண்டி என்ற ஒழுங்கிலும் மாணவர்கள் தெரிவாகும் எண்ணிக்கை அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியதுடன்

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து அதிகூடிய வர்த்கப் பிரிவு மாணவர்களும் முல்லைத்தீவிலிருந்து கலைத்துறையைச் சேர்ந்த அநேக மாணவர்களும் பல்கலைக்கழத்துக்கு தெரிவாகியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts