பல்கலைக்கழக வளாக முன்றலில் மாணவர்கள் போராட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன. அத்துடன் மருத்துவ பீட சிற்றுண்டி சாலையில் திலீபனின் படம் ஒட்டப்பட்டிருந்தது.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். சிற்றுண்டி சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டார்.

மூவரும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts