பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம்: வைத்தியசாலைக்குச் சென்றார் மாவை

கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) அதிகாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட, இரண்டு மாணவர்களும் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியானதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, உடற்கூற்று பரிசோதனை இடம்பெறும் யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்ற தகவலினால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், வைத்தியசாலை வளாகத்தில் சூழ்ந்தனர். இதனையடுத்து, அங்கு மாவை சேனாதிராசா மற்றும் வலிகாமம் வடக்கு முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் விஜயம் செய்தனர்.

உடற்கூற்று பரிசோதனை இன்னும் வெளியிடப்படாத நிலையில், மாணவர்கள் மாணவர்களின் இறப்பு தொடர்புடைய விவரங்களுக்காக காத்திருக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார் என்று தெரியவருகின்றது.

Related Posts