பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை, கொழும்பில் கண்டனபோராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கண்டித்து இன்று பிற்பகல் 4 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கண்டன போராட்டம் இடம்பெறவுள்ளது.

index

சிவில் அமைப்புக்களும் ஊடக அமைப்புக்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு நீதிக்காக குரல் எழுப்புமாறு ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை வடக்கில் நாளைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts