Ad Widget

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை!

தேர்தலில் வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதனைப் போன்றே பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் போதியளவு கால அவகாசம் வழங்கவில்லை என மாணவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாணவ மாணவியருக்கு விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறை வழங்காத துணை வேந்தர்களுக்கு எதிராக தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிக்கான தூரத்தின் அடிப்படையில் விடுமுறை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts