பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பு சாதாரணமானதே! பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் இறப்பானது தெற்கில் இடம்பெறும் சாதாரண இறப்புக்கள் போன்றதே என பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்துக் காரணமாக உயிரிழந்துள்ளனர் என முதலில் தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தினாலே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் தெற்குப் பகுதியிலும் இவ்வாறான சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. அதேபோல் வடக்கிலும் இதுபோன்றதொரு விபத்து நடைபெற்றுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், நீதிமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts