மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கட்டுபெத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் கூறினர்.
கற்றல் நடவடிக்கையின் பின்னர் நேற்றைய தினம் மாலை குறித்த மாணவன் விடுதிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவனின் உயிரிழப்பு சந்தேகத்திற்கிடமானது என்றும் தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.