எம்மால் யாழ் பல்கலையில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் சம்பந்தமாக பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையானது ஊடகங்கள் வாயிலாக எமக்கு அறியக்கிடைத்தது.
அவ்வறிக்கையில் உண்மைக்கு புறம்பான பல விடயங்கள் உள்ளன. அவற்றை நாம் மறுக்கின்றோம். எமது போராட்டம் தொடர்பில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம். நிர்வாக உத்தியோகத்தர்கள் அவ்விடயங்கள் குறித்து விவாதிக்க விரும்பின் நாங்கள் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக விவாதிக்கவும் விளக்கம் தரவும் தயாராகவுள்ளோம்.
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம்
தொடர்புடைய செய்தி
http://www.e-jaffna.com/archives/86175