பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம் நிறைவு

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தாம் மேற்கொண்ட போராட்டத்தை கைவிட்டுள்ளதாக, ஊழியர்கள் சங்க ஒன்றியத்தின் இணைத் தலைவர் டயஸ் விஜயகுமார தெரிவித்துள்ளார்.
உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஏழு கோரிக்கைகளை முன்னிருத்தி பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 27ம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

6 கோரிக்கைகளுக்கு உடனடித்தீர்வும் 7 வதற்கு 1 மாதகாலத்திற்குள் தீர்வும் வழங்க உறுதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வேலை நிறுத்தம் செய்த தற்காலிக  ஊழியர்களை நீக்குவதற்கான சுற்று நிருபத்தை மீளப்பெறவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

Related Posts