பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுதுள்ள செய்தி!

பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

18.04.2017 தினசரியொன்றில் ‘புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புக்கள்’ என்ற தலைப்பில் வெளியான செய்தியொன்றில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்ததாக சில விடயங்கள் வெளியாகியுள்ளன.

மேற்படி விடயம் தொடர்பாக சங்கத் தலைவரோ அல்லது இணைச்செயலாளர்களோ பத்திரிகையில் வெளியிடும்பொருட்டு செய்தி எதனையும் வழங்கவில்லை என்பதோடு வெளிமாவட்ட மற்றும் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கைப்பரம்பல் தொடர்பாக வெளிவந்த தகவலுடன் எமது உடன்பாடின்மையையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Related Posts