2016 – 2017ம் ஆண்டு கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில்:
கடந்த வருடங்களிலும் பார்க்க தெளிவான வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பிரவேசத்திற்கான கைநூலை இணையத்தளத்திலும் பார்வையிட முடியும். பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தின் ஊடாக விண்ணபிக்க வேண்டும் என்று தலைவர் தெரிவித்தார்.
2016-2016 கல்வியாண்டுக்காக இது நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இந்த திட்டம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் தெளிவுபடுத்தும் நடவடிக்கையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இதுகுறித்து ஆசியர்களுக்கும் தெரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட 300 அசிரியர்களுக்கு செயலமர்வு ஒன்று அடுத்த மாத முதற்பகுதியில் இடம்பெறவுள்ளது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா மேலும் கூறினார்.
எதிர்வரும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு முன்னர் பல்கலைக்கழகங்களுக்க மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் பணி பூர்த்தி செய்ய்பபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.