பல்கலைக்கழக அனுமதிகிடைக்காத மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு

நடந்து முடிந்த உயர்தர பரீட்ச்சை பெறுபேறுகளின் படி பல்கலை கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதிச் சான்றிதழ் அண்மையில் கிடைக்கபெற்றிருக்கும். இதன் படி தெரிவான மாணவர்களுக்கு முதற் கண் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை பல்கலைக்கழகத்துக்கான தெரிவானது மிகவும் போட்டி மிக்கது. ஆதலால் சித்தியடைந்த அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் நுழைவது கடினம். இவ்வாறான மாணவர்களுக்கு அரசு, அவர்கள் உயர் கல்வியை தொடர வேறு பலவழிகளை அமைத்துக் கொடுத்து வருகின்றது.

இதன்படி பௌதீக விஞ்ஞானப் (கணிதப்) பிரிவில் உயர்தர பரீட்ச்சையில் தோற்றிய மாணவர்களுக்கு உயர்கல்வியை மேற்கொள்வதற்கான சில அரச கல்வி நிறுவங்கள் ( Government Institutes for Higher Studies ) ..

1. NDT: National Diploma in Technology , இது மொரட்டுவ பல்கலைக் கழகத்துடன் இணைந்தாக காணப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு: http://www.mrt.ac.lk/itum/

2. NDES: National Diploma in Engineering Science, இந்த கற்கைநெறியை Institute of Engineering Technology இனால் வழங்குகின்றது. இது கட்டுநாயக்காவில் காணபடுகின்றது. மேலதிக விபரங்களுக்கு: http://www.iet.edu.lk/

3. Open University of Sri Lanka, இலங்கையில் இது பல மாவட்டங்களிலும் அமையப் பெற்றுள்ளது. தலைமைப் பல்கலைக்கழகம் நாவலயில் காணபடுகின்றது. மேலதிக விபரங்களுக்கு: http://www.ou.ac.lk/home/ , www.ou.ac.lk/eng/

4. HNDE: Higher National in Diploma in Engineering, இதுவும் நாட்டின் பல பகுதிகளில் காணபடுகின்றது. மேலதிக விபரங்களுக்கு: http://www.hndelk.com/p/Home/

5. University of Vocational Technology, மேலதிக விபரம் அறிய: http://www.univotec.ac.lk/

6. Vocational Training Center, மேலதிக விபரம் அறிய: http://www.vtasl.gov.lk/# , http://www.vtasl.gov.lk/nvq5ict.html , http://www.vtasl.gov.lk/vta/QS.html , http://www.vtasl.gov.lk/cisco.html

7. Technical Colleges, இலங்கையில் சுமார் 40 தொழில்நுட்ப கல்லூரிகள் காணபடுகின்றது.இவற்றின் பெயர் விபரம் அறிய: https://en.wikipedia.org/wiki/Technical_College_(Sri_Lanka), மேலதிக விபரம் அறிய கடந்த ஜூன் மாதம் வெளியான அரச வர்த்தமானி
http://documents.gov.lk/gazette/2015/PDF/Jun/05Jun2015/I-IIA(E)2015.06.05.pdf#sthash.QWCLLYCz.dpuf

8. SLIATE: Sri Lanka Institute of Advanced Technological Education, மேலதிக விபரம் அறிய: http://www.mohe.gov.lk/index.php/en/universities-and-institutes/universities-under-the-ministry-of-higher-education/sri-lanka-institute-of-advanced-technoligical-education-sliate

9. SLIIT: Sri Lanka Institute of Information Technology, மேலதிக விபரம் அறிய: http://www.sliit.lk/#
மேலே கூறப்பட்டுள்ள கல்வி நிறுவங்களில் சிலவற்றின் அனுமதிக் காலம் முடிவடைந்திருந்தாலும், வருகின்ற காலங்களில் இது உதவும் என நம்புகிறேன்.

இவைகள் மாணவர்களுக்கு இன்ஜினீரிங் (Engineering) பிரிவில் சிறந்த தொழில் சார் கல்வியை ( Industry based ) வழங்கி வருகின்றது. மேற்சொன்ன சில நிறுவனங்களின் பாடத்திட்டத்தில் Training சேர்த்தே காணபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Diploma முடித்தவர்கள் திறந்த பல்கலைக்கழகத்தில் (Open University), Degree இணை பூர்த்தி செய்ய முடியும்.

குறிப்பு: இலங்கை பல்கலைக்கழகங்களில் பல நூறு கற்கைநெறிகள் போதிக்கப் படுகின்ற போதிலும் எமது மாணவர்கள் ஒரு சிலவற்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்கின்றனர்.

நன்றி – Safran Bin Saleem-

Related Posts