2016-2017 பல்கலைக்கழக கல்வி ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாத ஜிசிஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேமகுமார தெரிவிக்கையில்:
அடுத்த மாதம் 20ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றார்.
இம்முறை இணையத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பப்பத்திரங்களை சமர்ப்பிக்க முடியுமென ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக அனுமதி தொடர்பான கையேட்டை புதன்கிழமை தொடக்கம் பெற முடியும். ஆணைக்குழு அங்கீகரித்த விநியோக முகவர்களிடமிருந்து கையேட்டைப் வாங்கலாம். அன்றைய தினம் பத்திரிகைகளில் மேலதிக விபரங்கள் பிரசுரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.