பல்கலைக்கழகங்களின் பீடங்களுக்கு மாணவர்கள் பதிவு செயப்படுவதாக தெரிவிப்பு

2016/17ஆம் கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு பீடத்திற்கும் மாணவர்களை பதிவு செய்யும் பணி தற்போது இடம்பெறுகிறது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் .14 பல்கலைக்கழகங்கள், மூன்று பீடங்கள், ஐந்து உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் 109 பாடநெறிகளுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

சாதாரண அனுமதிக்காக தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 696. குறித்த பாடநெறிகளுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் அடுத்த மாதம் இரண்டாம் வாரமளவில் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts