பலாலி விமான நிலையம் வடக்குக்கான சர்வதேச விமான நிலையமாக மாறும்! மாவை எம்.பி. தகவல்!!

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் நாம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் பொருளாதார வலயங்களையும் எதிர்பார்த்து இருக்கின்றோம். இவற்றை நிறைவேற்றுவதற்கான காலம் இப்போது கிட்டியுள்ளது.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நாம் முன்னெடுத்த திட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு விமான ஓடுபாதைகளைப் பெரிதாக அமைக்க வேண்டியிருப்பதுடன் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு மக்களின் காணிகளை சுவீகரிக்காது கடற்கரையோரங்களில் மண்ணை நிரப்பி அதற்கான சூழலை உருவாக்கும் திட்டத்தை நாம் விரும்புகின்றோம்.

இதற்கான திட்ட முன்மொழிவுகள் யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விரைவில் இடம்பெறவுள்ள இறுதிக்கட்டப் பேச்சில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன – என்றார்.

Related Posts