பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் இருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலமநேற்று பிற்பகல் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

அந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 10 பேரின் பரிசோதனை அறிக்கையில் கிடைத்த நிலையில் மூவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மானிப்பாயைச் சேர்ந்த மத போதகர் மேலதிக சிசிக்சைக்காக வெலிகந்தை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இருவரும் அங்கு மாற்றப்படுவார்கள் என்று அறியமுடிகிறது.

சுவிஸர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த போதகரால் நெருங்கிப் பழகியவர்களே பலாலி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

Related Posts