பலாலி இராஜராஜேஸ்வரி அம்மனை வழிபட இராணுவத்தினர் அனுமதி!!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை காலை 9.00 மணியிலிருந்து மாலை 3.00 மணிவரை மக்கள் வழிபாடுகளில் ஈடுபடலாம் என இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நவராத்திரி பூஜைகளை மேற்கொள்வதற்காக இராணுவத்தினரிடம் அனுமதி கோரப்பட்டது.

இதற்கிணங்க, கோவிலுக்குச் செல்லவிரும்பும் பக்தர்கள் எதிர்வரும் 1ஆம் திகதியிலிருந்து 10 நாட்கள் வரை குறித்த அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts