பலாலி, இரணைமடு விமானப்படைத் தளங்களில் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்!!

பலாலி மற்றும் இரணைமடு விமானப் படைத்தளங்களில் கோரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருபவர்களை தங்க வைக்கும் வகையில் அவை அமைக்கப்படுவதாக விமானப் படை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குரிய கோரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது படை முகாமில் அமைக்கப்படவுள்ளது என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.

அத்துடன், அதற்கு 5 மில்லியன் ரூபா நிதியும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts