பலாலியில் இருந்து திருப்பதிக்கு விமானசேவை – வருட இறுதிக்குள் ஆரம்பம்!

யாழ். பலாலி விமான நிலையத்தினூடாக இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டிற்குள் ஆரம்பிப்பிதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்காக முதற்கட்டமாக இந்திய அரசாங்கத்தினால் 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து இந்திய விமான சேவைகளை வழங்கும் குழு ஒன்று பலாலிக்குச் சென்று ஆய்வுகளை நடத்துவற்காக இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பலாலி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கான விமானசேவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts