இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் எம்.ஓ.எச்.டி. தார் சயிட் பாயிட் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று புதன்கிழமை சந்தித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட இருந்தனர்.