இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்த நிலையில், தொடர்ந்து விளையாடிய அவர் 124 ஓட்டங்களில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார்.
81-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை ஜோ ரூட் விளையாடினார். அப்போது அவர் அடித்த பந்து உமேஷ் யாதவை நோக்கி வந்தது. அவரும் பந்தை சிறந்த முறையில் பிடியெடுத்தார்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பந்தை மேலே தூக்கிப்போட்டு சந்தோசப்பட முயன்றார். அப்போது பந்து அவரது கையில் இருந்து நழுவியது.
எல்லோரும் உமேஷ் யாதவ், பிடியொடுப்பை கைநழுவ விட்டதாக எண்ணினர்.
ஆனால் 3-வது நடுவர் அது விக்கெட் இழப்பு என அறிவித்தார்.
அப்போதுதான் தெரிந்தது இதுவும் ஆட்டமிழப்பு என்று.