இலங்கைக்கு அருகில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வானம் இருள் சூழ்ந்து காணப்படும் எனவும், இதன்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிகமான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் கடற்பகுதியில், வடமேல் திசையை நோக்கி பலமான காற்று வீசலாம் எனவும், இது மணிக்கு 20 – 40 கிலோமீற்றராக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது