தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்தார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஜபாட்டா.
என்ன… பறந்தே கடந்தாரா? இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா.
விஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி இருக்கிறது.
ஜெட் பறக்கும் தட்டுகள் கொண்டு மனிதர்களை பறக்க வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு இருந்தார் ஃப்ரான்கி. அதற்கான தொழிற்நுட்பத்தையும் சாத்தியப்படுத்திய இவர், கிரோசின் நிரப்பப்பட்ட பையை சுமந்து பறக்கும் தட்டு மூலம் 22 நிமிடங்களில் 22 மைல்கள் பறந்துள்ளார். அதாவது 35.4 கி.மீ.
ஜூலை 25ம் தேதியே அந்த கால்வையை கடக்கும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சியானது எரிபொருளில் ஏற்பட்ட சிக்கலால் தோல்வியில் முடிந்தது.
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த பறக்கும் தட்டு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துவிட்டோம்… இப்போது வெற்றிகரமாக கால்வாயையும் கடந்துவிட்டோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது கண்ணீர் திரண்டு இருந்தது.
இது வரலாற்று சிறப்புமிக்க சம்பவமா என்பதை நான் தீர்மானிக்க முடியாது. காலம் பதில் சொல்லும் என்று அவர் தெரிவித்தார்.
திரண்டிருந்த கூட்டத்திடம் பேசிய ஃப்ரான்கி, பறக்கும் போது உச்சபட்சமாக மணிக்கு 170 கி.மீ என்ற வேகத்தை அடைந்தேன் என்று கூறினார்.
பறப்பதில் பெரிய சவால் என்னவென்றால் எரிபொருளை பயணத்தின் போது நிரப்புவதுதான்.
சென்ற முறை அவர் கால்வாயை கடக்க முயற்சித்த போது, எரிபொருள் பாதி வழியிலேயே தீர்ந்தது. மீண்டும் நிரப்ப எரிபொருள் நிரப்பட்ட பையை சுமந்து சென்ற கப்பலுக்கு அவர் செல்ல முயற்சித்த போது, கடலில் விழுந்தார்.
இந்த முறை அவருக்கு பாதுகாப்பாக மூன்று ஹெலிகாப்டர்களும், பெரிய கப்பல் ஒன்றும் சென்றது.
இந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்க ஃப்ரான்கி நிறுவனத்தை பிரான்ஸ் அரசாங்கம் கோரி உள்ளது.
இதற்காக 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் அளித்துள்ளது.
முதலில் பறந்தது