பருத்தித்துறை வைத்தியசாலையை தொடர்புகொள்ள முடியவில்லை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொலைபேசி இணைப்புக்கள் பழுதடைந்துள்ளதால், வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ளும் பொதுமக்களும் உள்ளகத்தில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த வைத்தியசாலையில் இரு வெளியக தொலைபேசி இணைப்புக்கள் உண்டு. இவற்றில் ஒரு இணைப்பு பழுதடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்வதற்கு ஒரேயொரு வெளியக இணைப்பு மாத்திரமே இருப்பதனால் அந்த இணைப்பு நெருக்கடி மிகுந்த இணைப்பாக இருந்து வருகின்றது.

இதேபோல உள்ளகப் பகுதியில் 25 க்கும் மேற்பட்ட இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் கிளினிக் சிகிச்சைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள 5 உள்ளக தொலைபேசி இணைப்புக்களில் 4 இணைப்புக்கள் பழுதடைந்துள்ளன.

இதன் காரணமாக கிளினிக் சிகிச்சைப் பிரிவில் கடைமையாற்றும் வைத்திய நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளுடன் தொடர்பு கொள்ள முடியாதுள்ளது. நீண்டகாலமாக இந்த இணைப்புக்கள் பழுதடைந்துள்ள போதும், இன்னமும் சீர்செய்யப்படவில்லை.

Related Posts