பருத்தித்துறை வீதி இருபாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் 2பேர் பலி 12 பேர் படுகாயம்(பட இணைப்பு)

பருத்தித்துறை வீதி இருபாலைசந்தியில் சற்று முன் இடம் பெற்ற வாகன விபத்தில் தென்பகுதிச் சுற்றுலா பயணிகள் பேருந்தும் தனியார் பயணிகள் பேரூந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் பலி 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது. உயிரிழந்தவர்கள் காயமடைந்தவர்கள் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. காயமடைந்தவர்கள் கோப்பாய் மற்றும் யாழ் வைத்தியசாலைகளில் அனுமதிக்கபட்டிருப்பதனால் சேதவிபரங்களை பெறமுடியவில்லை.

வீதியில் காப்பெற் இடப்படாத பகுதியை தவிர்த்து  செல்வதற்காக ஆசைப்பட்டு திசைமாறிசென்ற பயணிகள்  சிற்றுார்தியும் திருப்பத்தில் இருந்து வந்த பேரூந்தும் மோதியதன் விளைவே இவ்விபத்தென சம்பவத்தினை நேரில்கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts