பருத்தித்துறை மாணவர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர்

தற்போது நாட்டின் கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, அதனை செவ்வனே நிறைவேற்றுவதற்கு கல்வி அமைச்சரும், கல்வி இராஜாங்க அமைச்சரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

donate-bus-hatley

மேலும், இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு தமிழ் பிரிவிற்கு சேவையாற்ற கூடிய கல்வி இராஜாங்க அமைச்சர் ஒருவர் உருவாக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பஸ் ஒன்றை கையளிக்கும் நிகழ்வு நேற்று (06) பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலேயே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அத்துடன், அண்மையில் நான் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு சென்றிருந்த போது பாடசாலைக்கு பஸ் ஒன்றை தருவதாக உறுதி அளித்திருந்தேன் அதனையே தற்போது நிறைவேற்றி உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது கல்வி இராஜாங்க அமைச்சர் ஹாட்லி கல்லூரியின் தொழில்நுட்ப பீடத்தை திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts