பருத்தித்துறை-பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு!

28 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட, பருத்தித்துறை- பொன்னாலை வீதி நேற்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டது.

மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட பின்னர் பருத்தித்துறை – பொன்னாலை வீதியை திறக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே குறித்த வீதி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த வீதி திறந்து வைக்கப்பட்டதன் ஊடாக, இப்பகுதி மக்களுக்கு சுமார் 50 கிலோ மீற்றர் தூரம் சுற்றி வரவேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது.

1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கு பகுதி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் இந்த வீதி நிரந்தரமாக மக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts