பருத்தித்துறை நகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி திறந்துவைப்பு

point-newbldingபருத்தித்துறை நகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி கடந்த முதலாம் திகதி திறந்து வைகப்பட்டது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்கள்.

பிரதான வீதியிலிருந்து மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அமைச்சர் மற்றும் வடமாகண ஆளுநர் ஆகியோர் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன், வளாகத்தில் பயன்தரு மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

மண்டபத்தில் நகராட்சி மன்றத் தவிசாளர் சபா.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர், வடமாகாண ஆளுநர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இப்புதிய கட்டிடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் 53 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்கள், யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஜெகூ மற்றும் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts