பருத்தித்துறையில் NPP ஆதரவாளர்கள் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!!

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ். பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் வருகைதந்த குழுவால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆகியோர் விரைந்துள்ளனர்.

அதேநேரம், கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts