பருத்தித்துறை பகுதியில் 87 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து, கஞ்சாவை கடத்துவந்ததாக சந்தேகிக்கப்படும் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது படகில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதனை கடத்தி வந்த பருத்திறை இரும்பசிட்டி பகுதியை சேர்ந்த மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 50 கிலோ கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி, 87 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
கஞ்சாவுடன், கைது செய்யப்பட்ட நபர்களும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க மேலும் தெரிவித்திருந்தார்.