யாழ். பருத்தித்துறையில் கொள்ளையிடப்பட்ட 15 கையடக்க தொலைபேசிகளுடன் இருவர் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் பருத்தித்துறை Abans காட்சியறையை உடைத்து பல பெறுமதியான கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து பருத்தித்துறை பொலிஸார் மற்றும் யாழ் .மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றய தினம் 15 கையடக்கத் தொலைபேசிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறையை வதிவிடமாக கொண்ட 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.