பருத்தித்துறையில் வாள்வெட்டு! 3 பேர் படுகாயம்!!

பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மூவரில் இருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றையவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts