பருத்தித்துறையில் பாரிய மீன்பிடித்துறைமுகம்!

நாட்டின் பாரிய மீன்பிடித்துறைமுகம் பருத்தித்துறைக்கு அண்மையில் அமைக்கப்படவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் வடக்கு மீனவர்களுக்கு 150 மீன்பிடிப் படகுகளை இலவசமாக வழங்குவதுடன், 50 வீத நிவாரணக் கடன் அடிப்படையில், கடற்றொழில் உபகரணங்கள் வழங்குவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சரை மேற்கோள் காட்டி தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவ சமூகத்திற்கும் தேவையான வசதிகள் வழங்கப்படவுள்ள அதேவேளை, கடற்றொழில் சமூகத்தினருக்கு இவ்வாறான நிவாரணங்கள் 20 வருடங்களுக்குப் பின்னரே வழங்கப்படுவதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts