பருத்தித்துறையில் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

banger-paruththuraiபருத்தித்துறை வீ.எம்.வீதிச் சந்திக்கருகிலுள்ள வீட்டின் சமையலறையின் கீழ்அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியொன்று நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவப் புலனாய்வாளர்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டு, இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து குறித்த பதுங்கு குழியைத் தோண்டிப் பார்த்த போது, படிக்கட்டுகளுடன் கூடியதாக இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பங்கர் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பங்கராக இருக்கலாம் என இராணுவத்தினர் தெரிவித்ததாக பொலிஸார் கூறினார்.

மேலும் குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இங்கிலாந்தில் வசித்து வரும் நிலையில், அவ்வீட்டில் தற்போது வாடகைக் குடியிருப்பாளர் குடியிருப்பதாகவும் அவர்கள் தமக்கு எதுவும் தெரியாதெனவும் கூறியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts